நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது!

நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது!

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று மஹிந்தவை பிரதமராக்கியுள்ளார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என அவர் தெரிவித்தார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அவசர கூட்டம் கூடியது.

இதில் பிரசன்னமாகியிருந்த அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவே சட்ட ரீதியான பிரதமர். எனவே அவருக்கு ஆதரவாக சிறுபான்மையின கட்சிகளாக நாம் இருக்கின்றோம்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. ஆகவே பெரும்பான்மை ஆதரவோடு பிரதமர் தொடர்ந்தும் ஆட்சியை நடத்துவார்” என்று தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net