நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தினார் ஜனாதிபதி!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தினார் ஜனாதிபதி!

இலங்கை நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.

அத்தோடு, மூன்றாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி கூடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ அமர்த்தப்பட்டுள்ளார்.

இச்செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், உடன் நாடாளுமன்றத்தை நாளைய தினமே கூட்டுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி முடிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net