8 மணி நேரத்தில் 14,186 பான்கேக்குகள் சமைத்து உலக சாதனை!

8 மணி நேரத்தில் 14,186 பான்கேக்குகள் சமைத்து உலக சாதனை!

போஸ்னியாவில் குறைந்த நேரத்தில் அதிக பான்கேக்குகள் சமைத்து சமையல் கலைஞர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

600 கிலோ மாவு 400 லிட்டர் பால், 300 லிட்டர் எண்ணெய் கொண்டு பான் கேக்குகள் தயாரிக்கப்பட்டன.

போஸ்னியா, செர்பியா, மாசிடோனியா, மொன்டெநிக்ரோ (Montenegro) ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 140 சமையல் கலைஞர்கள் இந்த சாதனையில் பங்கேற்றுள்ளனர்.

8 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 186 பான்கேக்குகளைச் சமைத்து, இதற்கு முதல் காணப்பட்ட அதே நேரத்தில் 12 ஆயிரத்து 716 பான்கேக்குகள் சமைத்த உலக சாதனையையும் இவர்கள் முறியடித்துள்ளனர்.

குறித்த பான்கேக்குகளை விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பரிமாறி தங்களது மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net