#MeToo விவகாரம்: அனிருத் பெண்களுக்கு ஆதரவு!

#MeToo விவகாரம்: அனிருத் பெண்களுக்கு ஆதரவு!

உலகளவில் எல்லோருடைய கவனத்தை பெற்று வரும் #MeToo விவகாரத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்தநிலையில் #MeToo விவகாரம் தாம் வரவேற்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்தும் இது குறித்து புகார்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கு நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்றும், இதன் போதும் அனிருத் கூறினார்.

இந்த நிலையில், ‘பேட்ட’ திரைப்படம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அனிருத் இன்னும் இரண்டு மாதங்களில் ‘பேட்ட’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Copyright © 9133 Mukadu · All rights reserved · designed by Speed IT net