அமைச்சரின் பாதுகாவலர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்!

கொழும்பில் முக்கிய இடத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டு தாபன தலைமையகத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net