அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்!

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்!

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை நியமித்தார்.

அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராவார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பில் உடனடியாக நாம் தீர்மானித்திருக்கவில்லை. அண்மைக்காலமாக அந்த விடயம் சம்பந்தமாக ஆழமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் படுகொலைச்சதி, நாட்டின் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக சபாநாயகர் கருஜயசூரியவிடத்தில் அறிவித்திருந்தோம்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டார். இதனடிப்படையில் பழைய அமைச்சரவை இயல்பாகவே கலைந்துள்ளது.

புதிய அமைச்சரவையில் 30அமைச்சர்களையே நியமிக்க முடியும். அதற்கான பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டாக இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டங்களை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை நியமித்துள்ளார்.

அதற்கமைவாக மஹிந்த ராஜபக்ஷவே உத்தியோக பூர்வமான பிரதமாராவார். அதற்கு அப்பால் எவரும் அப்பதவியினைக் கோர முடியாது என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net