நாடாளுமன்றத்தை கூட்டும்வரை ரணில் வெளியேறமாட்டார்!

நாடாளுமன்றத்தை கூட்டும்வரை ரணில் வெளியேறமாட்டார்!

நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறமாட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே பிரதமராக பதவிவகித்துவந்த ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென மஹிந்த ஆதரவு அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், புதிய பிரதமர் நியமனம் சட்டத்திற்கு முரணானதென்றும், அரசியலமைப்பின் பிரகாரம் ரணிலே பிரதமர் என்றும் ஐ.தே.கவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக ரணில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இன்று வெளியேறாவிட்டால் அலரி மாளிகைக்குள் சென்று பலவந்தமாக வெளியேற்றுவோம் என விமல் உள்ளிட்ட தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பின்னர் பிரதமருக்கான பாதுகாப்பும் நேற்றுமுதல் அகற்றப்பட்டுள்ள நிலையில், இன்று முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 8257 Mukadu · All rights reserved · designed by Speed IT net