பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ!

பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ!

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக்கிய பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த கோட்டாவிற்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த பாதுகாப்புச் செயலாளராக கோட்டா நியமிக்கப்படுவாரென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக்ரேயும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net