பிரம்டனில் கத்திக் குத்து!

பிரம்டனில் கத்திக் குத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி!

பிரம்டனில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Archdekin Drive மற்றும் Seaborn வீதிப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.45 அளவில் இந்தச விபத்து இடம்பெற்றுளளது.

அந்த பகுதியில் குழப்பமான ஒரு நிலை நிலவுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, தாம் அந்தப் பகுதிக்கு விரைந்ததாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்ட ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவலைத் தவிர வேறு தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த இடத்தில் விசாரணைகள் இடம்பெறுவதால், அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net