பிரித்தானியாவில் பாரிய பனிப்பொழிவு!

பிரித்தானியாவில் பாரிய பனிப்பொழிவு!

பிரித்தானியாவின் பல பகுதிகளில் இம்மாதம் பாரிய பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த தசாப்தத்திலேயே அதி உயர்ந்த பனிப் பொழிவை இம்மாதப் பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய காலநிலை அவதானிப்பு நிலையம் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்தில் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் வட இங்கிலாந்தில் 1 பாகை செல்சியஸ் வரையும் வெப்பநிலை பாரிய வீழ்ச்சியைக் காணும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பனிப்பொழிவுக்கும் வெப்பநிலை வீழ்ச்சிக்கும் ஏற்றற்போல் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பையும் உறைவிடத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள வீடுகளை பனிப்படலங்கள் முற்றறாக மூடும் அபாயம் காணப்படுவதாகவும் வானிநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6811 Mukadu · All rights reserved · designed by Speed IT net