பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net