முடக்கப்படும் நிலையில் நாட்டின் தொலைத்தொடர்புகள்?

முடக்கப்படும் நிலையில் நாட்டின் தொலைத்தொடர்புகள்?

நாட்டின் தொலைதொடர்புகளை முடக்கம் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் 3ஜீ மற்றும் 4ஜீ இணைப்புக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கிளர்ச்சியை தடுக்கும் நோக்கில் இவ்வாறான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நீக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து மக்களினால் செய்யப்படக்கூடிய கிளர்ச்சியை தடுக்க இணைய சேவையை முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net