அர்ஜூன ரணதுங்க விவகாரம் : 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

அர்ஜூன ரணதுங்க விவகாரம் : 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவனரால் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அர்ஜூன ரணதுங்க 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே பொலிஸார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net