சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை!

சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை!

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக சபாநாயகரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியம் இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயத்தில் சபாநாயகரை கலந்தாலோசிப்பதற்கான எவ்வித கடப்பாடும் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை பலர் மத்தியிலும் விமர்சனங்களை தோற்றுவித்தது. இந்நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net