சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது!

சர்கார் கதை விவகாரம் முடிவுற்றது!

‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தில் தனக்கும், வழக்கு தொடர்ந்த அருண் என்பவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கம் ‘சர்கார்’ கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருந்தார். மேலும் இருவருக்கும் ஒரே சிந்தனை இருந்திருக்கலாம். இது அதன் பிரதி இல்லை. நான் நீதிமன்றத்தில் சாந்தித்துக்கொள்கின்றேன் என கே. பாக்கியராஜிடம் கூறினார்.

‘சர்கார்’ கதையை திருடி உருவாக்கவில்லை. இரவு பகலாக கடின உழைப்பால் திரைக்கதையை உருவாக்கினோம் என எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா ஜெயமோகனும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வருண் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கே. பாக்கியராஜ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்நிலையாகி இருந்தனர்.

‘சர்கார்’ விவகாரத்தில் தாங்களுக்கள் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக முருகதாஸ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் குறித்த விசாரனை இன்று நடைபெற்ற போது மனுதாரர் அருணின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இந்தநிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது ‘சர்கார்’ திரைப்படக் கதை விவகாரம் இன்று முடிவுக்க வரும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 6508 Mukadu · All rights reserved · designed by Speed IT net