முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு அகற்றப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக 10 பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1934 Mukadu · All rights reserved · designed by Speed IT net