ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி!

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: முதியவர் பலி!

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் நகரிலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடியிருப்பு கட்டடத்தின் பத்தாவது மாடியிலுள்ள வீடொன்றில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இத்தீவிபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் குறித்த முதியவர் சிக்கிக் கொண்டிருந்ததை அவதானித்த தீயணைப்பு வீரர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

குறித்த குடியிருப்பின் படுக்கை அறையிலிருந்தே தீ பரவியுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net