விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தில் அஞ்சலி!

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தில் அஞ்சலி!

“பாகுபலி-” திரைப்படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷன்ஸ் தற்போது, ‘மடை திறந்து,’ ‘1945’ (தெலுங்கு), ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கின்றார். முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கள் தாய்லாந்தில் தொடங்கி, தொடர்ந்தும் 40 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாட்டில் திரைப்படமாவது, இதுதான் முதல் படம்.

அந்த அளவுக்கு கதையும், சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தி வருகினறோம்’ என இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத்திரைப்படம் காதலும், மோதலும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது தயாராகி வருகின்றது. ‘சேதுபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இயக்கும் இந்ததிரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கின்றார்.

எஸ்.என்.ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா, இர்பான் மாலிக் என கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் இதுவாகும். விஜய் சேதுபதி அஞ்சலி நடித்த முக்கியமான காட்சிகள், தாய்லாந்தில் படமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net