தற்போதைய நிலைமை தொடர்ந்தால் சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம்!

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான ஸ்திரமற்ற நிலைமை தொடர்பான சர்வதேச உன்னிப்பாக அவதானித்து வருவதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தன்னிச்சையாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி புதிய பிரதமரை நியமித்து, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளமை காரணமாக அமெரிக்கா, இந்தியா, சீனா , ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது முழு சர்வதேசமும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலைமையில் இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பு விடுத்திருந்ததுடன் அந்த அழைப்பை பல ராஜதந்திரிகள் நிராகரித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பன இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், அரசியல் ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியான தடைகளை சர்வதேசம் விதிக்கக் கூடும் என ராஜதந்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net