ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

காபுல் நகரிலுள்ள பெரிய சிறைச்சாலையான பவுல் ஈ சர்க்கிக்கு அருகில் இன்று (புதன்கிழமை) குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனத்திற்கு அருகில் வைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஜீப் தனீஸ் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த மூவரும் சிறைச்சாலை அதிகாரிகள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 0499 Mukadu · All rights reserved · designed by Speed IT net