இலங்கையில் 75 வீதமான மக்கள் ரணிலை வெறுக்கின்றனர்!

இலங்கையில் 75 வீதமான மக்கள் ரணிலை வெறுக்கின்றனர்!

நாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்பு, தன்னிடம் உள்ள அதிகாரங்களுக்கு அமைய புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்களை சந்தித்த ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அனைத்து நாடுகளுடனும் அனைத்து சக்திகளின் ஆதரவுடன் புதிய அரசாங்கம் முன்னெடுத்து செல்வதாகவும், இலங்கை அபிவிருத்தி நடவடிக்காக அனைத்து நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டு மக்களில் நூற்றுக்கு 70 – 75 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்திலேயே உள்ளனர்.

மக்களின் இதய துடிப்பை அறிந்து கொண்டு மஹிந்தவை பிரதமராக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமை, ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உறுத செய்து வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Copyright © 5964 Mukadu · All rights reserved · designed by Speed IT net