நடிகை சமந்தாவின் அசத்தல் பேட்டி!

நடிகை சமந்தாவின் அசத்தல் பேட்டி!

கவுதம் மேனன் இயக்கத்தில் ‘ஏமாய சேஷாவே’ படத்தில் நான் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரம் தான் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக் கொள்ள காரணமாக அமைந்ததாக சமந்தா கூறியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். புதிய தெலுங்கு படமொன்றில் 70 வயது கிழவியாகவும் நடிக்க இருக்கின்றார்.

தனது சினிமா அனுபவம் பற்றி சமந்தா கூறியபோது:

”நடிகர் மற்றும் நடிகைகள் மீது எந்த கதாபாத்திரம் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.

கதாபாத்திரங்களில் எளிதாக நடித்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது. எனது நீண்ட சினிமா பயணத்தில் நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே எனக்கு முக்கியமானது. கதாபாத்திரத்தை புரிந்து அதுவாகவே மாறிவிடுவேன்.

கதாபாத்திரங்கள் மூலம் வாழ்க்கைக்கு சம்பந்தமான நல்லது கெட்டதை நெருங்கி பார்த்தேன். நிறைய விடயங்களை சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

மேலும் ‘ஏ மாய சேஷாவே’ தெலுங்கு படத்தில் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. என்னையே அந்த திரைப்படம மாற்றியது. ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் அதுதான் காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் சமந்தா என்றால் நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்கள் நினைக்க ஆரம்பித்தனர். நல்ல கதாபாத்திரங்கள் அமைய அந்த திரைப்படம் தான் ஒரு முக்கிய காரணம்.

அன்று இருந்து இன்று வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் நிதானமாக யோசித்து முடிவுகள் எடுக்க கற்றுக்கொண்டேன்.

இந்த எச்சரிக்கை உணர்வு என்னை உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்திவிட்டது.” என்று இரசிகர்களிடம் தனது மகிழ்சியையும், சினிமா அனுபவங்கள் குறித்தும் சமந்தா அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net