நாலக டி சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு!

நாலக டி சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நாலக டி சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட வார்ட் ஒன்றில் நாலக டி சில்வா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாலக டி சில்வா கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 7ம் திகதி வரையில் அவரது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net