புதிய பிரதமர் நியமனம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு!

புதிய பிரதமர் நியமனம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றவுடன் நான் அவரை நேரில் சென்று சந்தித்திருந்தேன்.

அதன்போது அவர் எடுத்துரைத்த முதலாவது விடயமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அமைந்திருந்தது.

எனவே, நமது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எனக்கு தற்போது இரட்டிப்பு நம்பிக்கை கிட்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net