மைத்திரி – மகிந்த கைது செய்யப்பட வேண்டும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
குறித்த இருவரும் சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணான வகையில் செயற்படுவார்களாயின் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியினர் அலரிமாளிகை வளாகத்தில் ஒழுங்கு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற காரணத்தினாலேயே இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்கும் அரசியலமைப்புக்கும் எதிராக செயற்படுபவர்களின் ஆட்சியை கவிழ்க்க பொது மக்கள் நாடாளுமன்றை சுற்றிவளைத்து கைப்பற்ற வேண்டும் என மேலும் கூறியுள்ளார்.