வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு கிணறு அமைக்கும் பணி பொலிஸாரினால் தடை!
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம். மீறி செயற்பட்டால் அனைவரையும் கைது செய்வோம் என கிணறு அமைப்பதற்கு வந்தவர்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தை தொடர்ந்து கிணறு அமைப்பதற்கென வந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வாறான செயற்பாட்டினால் குறித்த கிணறு அமைப்பதற்கான நிதி திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.