உக்ரேன் மீது ரஷ்யா பொருளாதாரத்தடை!
உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யாவில் காணப்படும் உக்ரேனுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அந்நாட்டின் அரசியல்வாதிகளிற்குச் சொந்தமானதாகும்.
இந்நிலையில், ரஷ்யப் பிரதமர் டிமிற்றி மெட்வடவ்வினால் இன்று (வியாழக்கிழமை) உக்ரேனுக்கு சாதகமற்ற புதிய பொருளாதார செயற்பாடுகள் கைச்சாத்திட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ரஷ்யாவிலுள்ள உக்ரேனுக்கு சொந்தமான 68 வர்த்தகங்களில் உக்ரேனின் முன்னாள் பிரதமர் யுலியா திமோசென்கோ மற்றும் உக்ரேனின் தற்போதைய ஜனாதிபதி பெற்றோ பொரோசென்கோவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் ரஷ்ய வர்த்தக நடவடிக்கையின் மீது உக்ரேன் மேற்கொண்ட பொருளாதார தடைக்கு எதிர்த்தாக்குதலாக குறித்த செயற்பாடு அமையுமென ரஷ்ய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.