எஞ்சிய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் விடுதலை!
பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன் முன்னாள் போராளிகளுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தினால் சுமார் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன் 3,000 க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளிக்கும் வகையில் செயற்படும் என கூறினார்.
மேலும் மீதமுள்ள அரசியல் கைதிகளுக்கும் அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரங்களைக் கண்டறிந்து இந்த அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.