ஐ.தே.கட்சியின் மிக முக்கிய புள்ளிகள் கட்சித்தாவும் தயார் நிலையில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் கட்சித்தாவ உள்ளதாக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, எஸ்.பி.நாவின்ன, ஜோன் அமரதுங்க, பி. ஹரிசன், பாலித ரங்கே பண்டாரமற்றும் அசோக அபேசிங்க உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட பேர் கட்சித்தாவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் மிக முக்கிய பதவிகளிலும், அமைச்சுப் பதவிகளிலும்வகித்த இவர்கள் தற்போது மகிந்த பக்கம் தாவ உள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் பக்கம் உள்ள 11 பேர் ரணிலுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு ஜனாதிபதி பக்கம் இருந்து கட்சித்தாவ உள்ளவர்களுடன் ஜனாதிபதி சமரசப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், இதையடுத்து குறித்த 11 பேரும் கட்சித்தாவும் தமது முடிவை மாற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் குறைவடைவதுடன், ஜனாதிபதி மற்றும் மகிந்த பக்கம் பலம் அதிகரிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.