சட்டம் ஒழுங்கு அமைச்சு மைத்திரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த – மைத்திரி தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தில் அண்மையில் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மேலும் சிலருக்கு இன்று மாலை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.