அதிகளவு வெப்பத்தை கடல்களே உறிஞ்சுகின்றன!

அதிகளவு வெப்பத்தை கடல்களே உறிஞ்சுகின்றன!

இருபத்தைந்து ஆண்டுகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட அதிகளவு வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக புதியஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எரிபொருள் உமிழ்வுகளின் காரணமாக பூமி பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கான இலக்குகளை எட்டுவது மேலும் அதிக சவால் நிறைந்ததாக அமையுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைவது குறித்து விஞ்ஞானிகள் தங்களது கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வுகூறியிருந்தாலும் பசுமை இல்ல வாயுக்கள் என்று அறியப்பட்ட மனித நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் வெப்பமானது அதிகரிப்பதன் மூலம் புவிமேலும் வெப்பமடைகின்றது.

பசுமை இல்ல விளைவால் வெளியேறும் வெப்பத்தில் 90 சதவீதத்தை கடல்கள் உறிஞ்சுகின்றன என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் சமீபத்திய மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது.

கடல்கள் அதிக வெப்பமாவதால் கடல் நீரில் ஒட்ஸிசனின் அளவு குறையுமெனவும் இது பல கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெப்பநிலை உயர்வதால் கடல் மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net