இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ள நாமல்!
இலங்கை மக்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் சலுகைகள் மேலும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உர மானியம், எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.