கனா திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

கனா திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கனா திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் கனா. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகின்றார்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கின்றார்.

மேலும் அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்கள்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் திவிரமாக நடந்து வரும் நிலையில், திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியீடத் திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Copyright © 2540 Mukadu · All rights reserved · designed by Speed IT net