நீதியை காக்கும் தார்மீகப்பொறுப்பு சபாநாயகரிடம்!
ஜனாதிபதியின் செயற்பாடு மிக மோசமான ஜனநாயக மீறல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சபையின் தலைவர் என்ற அடிப்படையிலேயே சபாநாயகரிடம் தற்போது தார்மீக பொறுப்பு மாத்திரமல்ல நீதியின் கடப்பாடும் இருக்கின்றது என்பதை இன்று வலியுறுத்தியுள்ளோம்.
இதை செய்வதன் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அராஜக நிலையினை கட்டுப்படுத்த முடியும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.