பிரித்தானியாவில் உலா வரும் காற்றை சுத்தப்படுத்தும் பேருந்து!
சர்வதேச ரீதியாக சுற்றுப்புறச்சூழல் பெருமளவில் மாசடைந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில், பிரித்தானியாவில் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக தனியான பேருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் காற்றை சுத்தப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து செல்லும் இடங்களில் மாசடைந்துள்ள காற்று சுத்தப்படுத்தப்படுகிறது.
புளூ ஸ்டார் என்றழைக்கப்படும் இந்த பேருந்து தற்போது சவுத்தம்டன் பகுதியில் உலா வருகிறது.
சோதனை அடிப்படையில் கோ–அகெட் குரூப் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. விரைவில் சூழல் மாசு அதிகமுள்ள பகுதியில் இந்த பேருந்தை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.