மஹிந்தவின் பிரதமர் பதவியை அகற்ற அமெரிக்கா சதித்திட்டம்!

மஹிந்தவின் பிரதமர் பதவியை அகற்ற அமெரிக்கா சதித்திட்டம்!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாக அவர் அந்த மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகின்றது எனவும் அதனை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக தயான் ஜயதிலக்க கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net