இந்தோனேஷிய விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர் பலி!
இந்தோனேஷியாவில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து நேர்ந்த இடத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமானத்தின் பாகங்களையும் தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சியாச்ருல் ஆன்டோ என்ற இந்தோனேஷிய மீட்புப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் 29 ஆம் திகதி ஜாவா கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏயார் விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து குறித்த கடற்பரப்பில் மீட்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.