எகிப்தில் 7 பேரை கொன்று குவித்தது நாமே!
எகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகமல் இருந்த நிலையில், இத்தாக்குலுக்கு தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
எகிப்திய தலைநகர் கெய்ரோவின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு தொலைதூர பாலைவனம் மடாலயத்திற்கு, கிறித்துவ யாத்திரை சென்ற இரண்டு பேருந்துகள் மீதே நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டது.
காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் சென்றுக் கொண்டிருந்த குறித்த பேரூந்துகளை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், பேரூந்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு, 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்லாமிய நாடுகளான சிரியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளில், சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.