ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலிபான்கள் மோதல்: 21 பேர் பலி!

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலிபான்கள் மோதல்: 21 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே வெடித்த மோதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த மோதல் சம்பவம் கோக்யானி மாவட்டத்துக்குட்பட்ட ஸாவா பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நன்கர்ஹர் மாகாணத்துக்கும் தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள மற்றைய பகுதிகளிலும் அடிக்கடி மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்போது பொதுமக்களின் உயிர்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1321 Mukadu · All rights reserved · designed by Speed IT net