சிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10!
சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில்அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி mi மிக்ஸ் 3 போன்றே மெல்லிய பெசல்கள் மற்றும் பெரிய மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தென்கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 93.4 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-உடல் ரேஷியோ, 4000 எம்.ஏ.ஹெச். மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மூன்று வித வகைகளில்கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய கலக்ஸி எஸ்10 மொடல் கறுப்பு, கிரே, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என ஆறு வித நிறங்களில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.