ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியுள்ளார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பை மீறியுள்ளார் என ஜே.வி.வி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே ஜே.வி.வியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமாயின் சபாநாயகருடன் பேசியே முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் இந்த விடயத்தில் ஜனாதிபதி அதனை கடைபிடிக்கவில்லை. இதன்போது ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியுள்ளார். தற்போது வரை ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அறிவித்தாக நாம் அறியவில்லை.
அப்படியில்லாவிட்டால் சபாநாயகர் என்ற வகையில் உங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாம் வேண்டுகோள்விடுக்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.