புலிகளை வீழ்த்தியதைவிட யானையை வீழ்த்தியதே பெரு மகிழ்ச்சி!
பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பிலேயே மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில்,
ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் பிரதமராக மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயார், கடந்த அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சிக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை போன்று தற்போதைய அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் செய்யாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பிலேயே மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர் என மீளவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.