பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்!

பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்!

எரிபொருளின் விலை குறைவடைந்துள்ளமை காரணமாக, பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு தனியார் பேருந்து தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருளின் விலை குறைப்பிற்கமைய பேருந்து கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேருந்து கட்டணத்திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாயினாலும் குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net