பேரூந்து தீப்பரவலில் இருந்து தப்பிய சிட்னி பயணிகள்!
சிட்னி துறைமுக பாலம் வழியாக பயணித்த பேரூந்து ஒன்று திடிரென தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (வௌ்ளிக்கிழமை) திருமண நிகழ்வு ஒன்றுக்காக சென்ற பேரூந்து ஒன்றில் 26 பேர் பயணித்த நிலையில், தீவிபத்து இடம்பெற்ற தருணத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக வௌியேறியுள்ளனர்.
சிட்னி துறைமுக நகரத்திற்கு அண்மையில் உள்ள நில எல்லைக்குறிக்கு அருகிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன்போது பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியதாகவும், அவசர சேவைகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.