மீண்டும் அணு ஆயத சோதனை! வடகொரியா எச்சரிக்கை!
அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் ஆரம்பிக்கவுள்ளதாக வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்ற பின்னரும் வடகொரியா மீதான சில பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாமால் உள்ளது.
இந்நிலையிலேயே வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது.