யாழ் இளைஞன் ரயிலில் இருந்து விழுந்து பரிதாபமாக பலி!
கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியைச் சேந்த 28 வயதுடைய விஜயசீலன் கிறிஸ்ரிதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கொழும்பில் மேசன்வேலை செய்பவர் எனவும் விடுமுறைக்காக வீடு செல்லும் வழியில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் அவருடன் பயணித்தவர்கள் தெரித்துள்ளனர்.
வவுனியா தாண்டிக்குளம் – ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று மாலை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
புகையிரதத்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கீழே விழுந்தோ இளைஞன் மரணம் அடைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.