கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்புக்காக அழைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பு எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரி இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயினும், இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டமைப்பின் எம்.பி. வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணிப் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் தாம் எப்படி இந்தச் சந்திப்பில் பங்கேற்பது எனக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net