//anjeng மஹிந்த மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு! | Mukadu

மஹிந்த மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு!

மஹிந்த மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

குறித்த சந்திப்பானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்திப்பின் போது, நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net