ஒரே மேடையில் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் மஹிந்த!
” மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.
பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்று வருகின்றது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.