ஜனாதிபதி தலைமையில் கூடியது புதிய அமைச்சரவை!
புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கூடும் நிலையில், நாளைய தினம் அரசாங்க விடுமுறை என்பதால் அமைச்சரவை இன்றைய தினம் கூடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் மஹிந்த அணி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக தொடர்வார் என சபாநாயகர் இன்று காலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.